Saturday, December 27, 2008

யூரி பெஸ்மனவ்

டோண்டு அவர்களின் சரித்திரத்தின் இருண்ட பக்கத்திலிருந்து என்ற இந்தப்பதிவைப் படிக்க நேர்ந்தது.

அவருக்கு மின்னஞ்சல் மூலமாக ஒருவர் அனுப்பியதாகக் கூறி அவர் இதைப் பதித்துள்ளார்.

அந்த மின்னஞ்சல்:

from Kashyapa Kumarila
reply-to
to
date Fri, Dec 26, 2008 at 6:42 AM
subject Fw: Video: How communist subversion of India happened
mailed-by xxx.com
signed-by xxx.com

ஐயா,

கீழே கண்டுள்ளவற்றை உங்கள் வலைப்பூவில் பதிவாக மாற்ற இயலுமா?

நன்றி,
KK
----------------------------------------------------------------

Yuri Bezmenov கெ.ஜி.பி. பிரச்சார பிரிவில் பணி புரிந்தவர். தில்லியில் சோவியத் தூதரகத்தில் அறுபதுகளில் 1970 வரை பணி புரிந்தவர். அந்த ஆண்டு அவர் அமெரிக்காவுக்கு ஓடினார்.

எண்பதுகளின் ஆரம்பத்தில் அவரது தொலைகாட்சி நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அது யூ ட்யூப்பில் 9 பாகங்களாக வந்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் கம்யூனிஸ்டுகள் அந்த நாட்டை கவிழ்க்க என்னென்ன முயற்சிகள் எல்லாம் செய்கின்றனர் என்பதை இந்த நேர்க்காணல் சுட்டிக் காட்டுகிறது. இந்தியாவின் பத்திரிகைக்காரர்க, எழுத்தாளர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் ஆகியோர் எவ்வாறெல்லாம் கம்யூனிசம் மற்றும் மார்க்சிசத்துக்கு தோதாக மூளைச்சலவை செய்யப்பட்டனர் என்பதையும் இதில் காணலாம். முக்கியமாக டேப்புகளின் 6, 7 மற்றும் 8-ஆம் பாகங்களை கூர்ந்து நோக்கவும். நம்மவர் பவிசு அதில் பல்லிளிக்கிறது.

ப்ளே லிஸ்ட்: http://www.youtube.com/view_play_list?p=96832BA85ECDC4FF

எல்லாவற்றையும் ஒத்து கொள்ளாவிட்டாலும் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்டுகள் செயல்பட்டு நம்மூர் “முற்போக்காளர்கள், விடுதலைவாதிகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள்” ஆகியோரை செதுக்கினர் என்பதையாவது பார்த்து அறியலாம்.

இப்போதைய இந்தியாவுக்கும் இது பொருந்தும். கிறித்துவ சர்ச்சுகள், அரபி முல்லாக்கள் ஆகியோரும் இம்மாதிரித்தான் செயல்பட்டு, குஹா போன்ற போலி மதசார்ப்பற்றவர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் அறிவுஜீவிகளை உருவாக்குகின்றனர்.


இது மிகவும் முக்கியமான ஆவனப்படுத்தப்படவேண்டிய யூடியூப் டேப்புகள். வீடியோக்கள் ஆவனப்படுத்தப்பட்ட இன்னோர் வலைத்தளம் இங்கே.

சோவியத் ரஷ்யாவின் எலும்புத்துண்டுக்கு வாலாட்டும் நாய்கள் தான் இந்தியாவில் "அறிவுசீவிகளாக" மாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை தெளிவாக விளக்கும் நேர்க்காணல் தான் அந்த யூடியூப் வீடியோக்கள்.

நேர்க்காணலில் யூரி பெஸ்மனவ் அடிக்கடி யூஸ்ஃபுல் இடியட்ஸ் என்றும் இண்டெலெக்சுவல்ஸ் என்றும் இண்டெலக்சுவல் ப்ராஸ்டிடியூட்ஸ் (கொள்கைத் தேவடியாட்கள்) என்றும் இடது சாரிச்சிந்தனை கொண்ட பத்திரிக்கையாளர்கள், பொலிடிக்கல் சைன்ஸ் பேராசிரியர்களைச் சொல்வது மிகவும் உண்மையான விஷயம்.

சமூக நீதி காக்க உதவுவது இடதுசாரித்தத்துவம் என்று நம்பி ஏமாறும் முட்டாள்கள் தான் "அறிவுசீவிகள்" என்று ஆணித்தரமாக நிரூபிக்கும் வீடியோ நேர்க்காணல் தான் சுட்டப்பட்டுள்ளது.

இனிமேலாவது நாம் இந்த இடது சாரிகளையும் அவர்தம் கொள்கையையும் நம்புவதை விடுவோம். ரஷ்யாவிற்குத் தேவடியாளாக இருப்பவர்கள் இந்தியாவில் மகாராணியாக இருப்பது யாருக்குக் கேவலம் ?


கம்யூனிஸ்டுகள், இடது இம்சைகள் மற்றும் எல்லாவிதமான இடது வால்த்தனங்களையும் ஒட்ட நறுக்கி இந்துமா சமுத்திரத்தில் எரிவதற்கு இந்தியாவிற்குத் தேவை ஒரு மக்கார்த்தே.

Sunday, November 30, 2008

கம்யூனிஸ்டைக் காயடித்தார் உன்னிகிருஷ்ணன்

மும்பையில் நடந்த தீவிரவாதத்தாக்குதலில் தம் இன்னுயிர் நீத்த கம்மாண்டோ சந்தீப் உன்னிகிருஷ்ணனின் தந்தை தான் திரு உன்னிகிருஷ்ணன். பங்களூரில் வசிக்கும் இவரை சந்தித்து இரங்கல் தெரிவிக்க வந்த கேரளக் கம்யூனிஸ்ட் முதலமைச்சர் திரு அச்சுதானந்தனை இவர் "வெளியே போங்கடா நாய்களா" என்று விரட்டிவிட்டிருக்கிறார்.

இந்த கம்யூனிஸ்ட் அச்சுதானந்தன் தான் பதவியேற்றதும் செய்த முதல் வேலை கோவை தொடர் குண்டுவெடிப்பில் கைதான மதானியை விடுதலை செய்யச் சொல்லி தமிழக முதலமைச்சர் கருணாநிதியைச் சந்தித்து வந்தது. இந்த மதானி விடுதலை செய்யப்பட்டதும் சந்தோஷம் தெரிவித்ததும் இந்த அச்சுதானந்தன் தான். கம்யூனிஸ்டுகளுக்கு தேசவிரோத இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கும் ஊறரிந்த கள்ளக்காதல் இருப்பது மீண்டும் ஒருமுறை தெளிவாகியிருக்கிறது இவரது செயல்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இறந்த செய்தி தெரிந்தும், அவர் இறுதி ஊர்வலம் நடக்கும் இடம் மற்றும் காலம் அறிந்தும் அதைப் புறக்கணித்துவிட்டு, ஆறுதல் சொல்ல இரண்டு நாள் களித்து சாவகாசமாக வந்து ஆறுதல் சொல்கிறேன் என்றால் என்ன அர்த்தம் ? இஸ்லாமிய ஓட்டுக்கள் தான்.

இஸ்லாமியர் ஓட்டுக்களுக்காக மதானியை விடுதலைச் செய்யச் சொல்லிக் கூறிய இந்தக் கம்யூனிஸ்டு நாயை "நாய்" என்று விளித்து விரட்டியதில் ஒரு தவறும் இல்லை. திரு உன்னிகிருஷ்ணன் ஒரு நல்ல மனிதர், தேசபக்தர் செய்யவேண்டியதைத் தான் செய்திருக்கிறார்.

மேலே சுட்டப்பட்டுள்ள வீடியோ தொடுப்பில் அவர், நாய் என்று விளிப்பதை படம் பிடித்துக் காட்டவும் சொல்கிறார்.

Monday, November 24, 2008

ஆனந்த் பட்வர்தன் என்னும் நல்லவர்

இன்று தான் சென்ற வார தமிழ்மண நட்சத்திரமான தருமி என்பவரின் பதிவைப் படிக்க நேர்ந்தது. ஆனந்த் பட்வர்தன் என்பவரின் டோகுமெண்டரி In the Name of God என்ற படத்தை வெகுவாகப் புகழ்ந்து எழுதியிருக்கிறார்.

ஆனந்த் பட்வர்தன் ஒரு நல்ல டோகுமெண்டரி பட இயக்குனர் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் அவரும் அவரது சினேகிதர்களும் அவர்களது உள்நோக்கங்களும் அவ்வளவாக சரியில்லை என்பதைச் சொல்லவே இந்தப் பதிவு.   பல பொது மேடைகளில் ஆனந்த் பட்வர்தன்  அடிப்படைவாத உள்நோக்கம் கொண்ட சில அறிவு ஜீவிகளுடன் கூட்டு சேர்கிறார் என்பது வேதனைக்குறிய உண்மை.

உதாரணமாக டோல்பி டிசூசா (Dolphy D'souza) என்பவர். இவர் மும்பையைச் சேர்ந்த கதோலிக்க அமைப்பை நடத்துபவர். டா விஞ்சி கோட் படத்தை இந்தியாவில் வெளியிடுவதற்கு முன் அதை தடை செய்யவேண்டும் என்பவர்களுக்கு உதவி செய்தவர். தி சின்ஸ் என்ற படத்தை தடை செய்திருக்கவேண்டும் என்று சொல்பவர்.

அதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் சற்று சுவாரஸ்யமானது.


He called the film "pornographic and sensational".

Mr D'Souza, who is also the vice-president of the Catholics' national body, has accused the director of the film of portraying a priest in bad light for commercial gains.

Catholics have urged Mr Pande to withdraw the film to show respect to the Christian community's hurt sentiments.


கதோலிக்க பாதிரியாரை கேவலமாக சித்தரித்து பணம் பண்ண நினைக்கிறார் என்றும், கதோலிக்கர்கள் மனம் புண்படும்படி படம் பண்ணியிருக்கிறார் இயக்குனர் என்றும் இவர் சாடுகிறார். சரி. இவர் நண்பர் ஆனந்த் பட்வர்தன் என்பவர் இயக்கிய We are not your monkeys மற்றும் In the Name of God என்ற டோகுமெண்டரி படங்கள் இந்துக்கள் மனம் புண்படும்படி உள்ளது என்று யாராவது சொன்னால் அவர்களுக்குக் கிடைக்கும் "இந்துத்வாவாதி" பட்டம்.

ஆனால் டோல்பி டிசூசா ஒரு "மதச்சார்பற்ற நல்ல மனிதர்".

டோல்பி டிசூசா போன்ற கத்தோலிக்க மத அடிப்படைவாதியுடன் கூட்டு சேரும் ஆனந்த் பட்வர்தன் என்பவர் ஊரைத் திருத்த இந்து அடிப்படைவாதம் பற்றி டோகுமெண்டரி எடுப்பது ஏன் ?

சொந்த நண்பரை புத்திமதி சொல்லித் திருத்த வக்கில்லாதவர்கள் எல்லாம் ஊருக்கு ஏன் உபதேசம் செய்ய வருகிறார்கள் ?